search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வங்காள தேசம் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட்"

    டாக்காவில் நடைபெற்ற 2-வது டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸை 36 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது வங்காளதேசம். #BANvWI
    வங்காளதேசம் - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 டாக்காவில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த வங்காள தேசம் 4 விக்கெட் இழப்பிற்கு 211 ரன்கள் குவித்தது.

    பின்னர் 212 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் களம் இறங்கியது. லெவிஸ் - ஷாய் ஹோப் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். லெவிஸ் 1 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த பூரன் 14 ரன்னிலும், ஹெட்மையர் 19 ரன்னிலும் வெளியேறினார்கள்.

    அதிரடி காட்டிய ஷாய் ஹோப் 19 பந்தில் 6 பவுண்டரியுடன் 36 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இவர் ஆட்டமிழந்ததும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு நெருக்கடி ஏற்பட்டது. ஆர் பொவேல் 34 பந்தில் 50 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்ததார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க வெஸ்ட் இண்டீஸ் 19.2 ஓவரில் 175 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. இதனால் வங்காள தேசம் 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஷாகிப் அல் ஹசன் 5 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.

    இதனால் தொடர் 1-1 சமநிலையில் உள்ளது. 3-வது டி20 கிரிக்கெட் போட்டி 22-ந்தேதி நடக்கிறது. இதில் வெற்றிபெறும் அணி தொடரை கைப்பற்றும்.
    வங்காள தேசத்திற்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஷாய் ஹோப்பின் அபார சதத்தால் வெஸ்ட் இண்டீஸ் 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. #BANvWI
    வங்காள தேசம் - வெஸ்ட் இண்டீஸ் இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி டாக்காவில் நேற்று நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த வங்காள தேசம் தமிம் இக்பால் (50), முஷ்பிகுர் ரஹிம் (62), ஷாகிப் அல் ஹசன் (65) ஆகியோரின் ஆட்டத்தால் 50 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 255 ரன்கள் சேர்த்தது.

    பின்னர் 256 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் களம் இறங்கியது. தொடக்க வீரர் ஹேம்ராஜ் (3), அடுத்து வந்த டேரன் பிராவோ (27), சாமுவேல்ஸ் (26), ஷிம்ரோன் ஹெட்மையர் (14) குறைந்த ரன்களிலேயே ஆட்டமிழந்தாலும், தொடக்க வீரரும், விக்கெட் கீப்பருமான ஷாய் ஹோப் அபாரமாக விளையாடி ஆட்டமிழக்காமல் 144 பந்தில் 146 ரன்கள் விளாச, வெஸ்ட் இண்டீஸ் 49.4 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 256 ரன்கள் எடுத்து நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.



    இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் 1-1 என சமநிலையில் உள்ளது. 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி நாளைமறுநாள் நடக்கிறது. இதில் வெற்றி பெறும் அணி தொடரை கைப்பற்றும்.
    வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் ஜேசன் ஹோல்டர் தோள்பட்டை காயம் காரணமாக வங்காள தேசத்திற்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து விலகியுள்ளார்.
    வெஸ்ட் இண்டீஸ் அணி வங்காள தேசம் சென்று இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் சிட்டஹாங்கிலும், 2-வது டெஸ்ட் டாக்காவிலும் நடக்கிறது. இந்த தொடர் வருகிற 22-ந்தேதி தொடங்குகிறது.

    இந்த தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியில் கேப்டன் ஜேசன் ஹோல்டர் இடம்பிடித்திருந்தார். உலகக்கோப்பைக்கான தகுதிச் சுற்று தொடரில் விளையாடும்போது அவருக்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. இந்த காயம் தற்போது அதிக வலியைக் கொடுத்ததால் டெஸ்ட் தொடரில் இருந்து விலகியுள்ளார்.

    ஜேசன் ஹோல்டருக்குப் பதிலாக வெஸ்ட் இண்டீஸ் அணியில் ரெய்மன் ரெய்பெர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ஹோல்டர் இல்லாததால் கே பிராத்வைட் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
    ×